
தமிழகத்தில் இன்று முதல் 26 ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை மையம் செய்தி வெளியிட்டுள்ளது. அதில், தென் மேற்கு பருவமழை காரணமாக, தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது, இதனால் வெப்பம் தணிந்து, தமிழகத்தில் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், 25 மற்றும் 26 ஆம் தேதிகளில் கோவை, நீலகிரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும், சென்னையை பொறுத்தவரை நாளை பொதுவாக வானம் மேமமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


