தாதா சாகேப் பால்கே விருது பெற்றார் மோகன்லால்…குவியும் வாழ்த்து..!

மலையாள நடிகர் மோகன்லாலுக்குத் தாதாசாகேப் பால்கே விருதைக் குடியரசுத் தலைவர் திரௌபதி-முர்மு வழங்கிச் சிறப்பித்தார். 71-வது தேசியத் திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டெல்லி விஞ்ஞான் பவனில் நடைபெற்றது.

இதில் திரைப்படத் துறையில் உள்ளோருக்கு வழங்கப்படும் உயரிய விருதான தாதாசாகேப் பால்கே விருதை, மலையாள நடிகர் மோகன்லாலுக்கு, குடியரசுத் தலைவர் திரௌபதி-முர்மு வழங்கிச் சிறப்பித்தார்.

தாதாசாகேப் பால்கே விருதைப் பெற்றுக்கொண்டபின் மோகன்லால் ஏற்புரையாற்றினார். அப்போது, மோகன்லால், மலையாளத் திரைத்துறையிலிருந்து வந்து, மிக இளம் வயதில் இந்த விருதைப் பெற்றேன் என்ற முறையில், தான் பெருமிதம் அடைவதாகவும், இது தனக்கு மட்டுமல்லாமல், மலையாளத் திரைத்துறைக்கே பெருமை என்றும் தெரிவித்தார்.

இதேபோன்று, ஜவான் படத்தில் நடித்த சாருக்கானுக்கும், 12-ஆம் வகுப்பில் பெயில் என்ற படத்தி;ல் நடித்த விக்ரந்த்-மசேக்கிற்கும், சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டது.

மேலும், மிசஸ் சாட்டர்ஜி வெர்சஸ் என்ற நார்வே படத்தில் நடித்த ராணி-முகர்ஜிக்கு சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டது.

சிறந்த துணை நடிகருக்கான விருது பார்க்கிங் திரைப்படத்தில் நடித்த எம்.எஸ.; பாஸ்கருக்கு வழங்கப்பட்டது. சிறந்த தமிழ்த் திரைப்படத்திற்கான விருது பார்க்கிங் திரைப்படத்திற்கு வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *