உலக சுற்றுச்சூழல் தினம் – ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் வாழ்த்து!

Advertisements
தமிழ்நாடு, இயற்கையுடன் ஒத்துழைந்து வாழும் சிறப்பான பாரம்பரியத்தை கொண்டுள்ளதாக ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் தெரிவித்துள்ளார்.
தமிழக ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார். இதில், இந்த நாள் தற்போதைய மற்றும் எதிர்காலத் தலைமுறையினருக்காக நமது சுற்றுச்சூழலைப் பாதுகாத்துப் பேண வேண்டிய கூட்டுப் பொறுப்பை நினைவூட்டுவதாகத் தெரிவித்தார்.
இயற்கை அனைத்து உயிர்களையும் தாங்கி நிற்கிறது. அதனால், அதன் நுண்ணிய சமநிலையை பாதுகாப்பது நமது கடமையாகும் என்று கூறினார். தமிழ்நாடு, இயற்கையுடன் ஒத்துழைந்து வாழும் சிறப்பான பாரம்பரியத்தை கொண்டுள்ளதாகத் தெரிவித்தார்.
ஒவ்வொரு குடிமகனும், குறிப்பாக இளைஞர்களும், பசுமையான, சுத்தமான மற்றும் ஆரோக்கியமான சூழலை உருவாக்க முனைப்புடன் செயல்பட வேண்டும் என நான் கேட்டுக்கொண்டார்.
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *