ஐரோப்பிய நாடுகள் அழிந்து வருவதாக டிரம்ப் பேச்சு..!

Advertisements

சட்டவிரோதக் குடியேற்றம் மற்றும் பசுமை எரிசக்தி கொள்கைகள் ஐரோப்பிய நாடுகளை அழித்து வருவதாக அமெரிக்க அதிபர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 80-வது ஐ.நா. பொது சபை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்ற அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஒரு மணி நேரம் உரையாற்றினார்.

அப்போது பேசியஅவர், ‘காலநிலை மாற்றம்’ என்பது உலகில் நிகழ்த்தப்பட்ட மிகப்பெரிய மோசடி என்றும் கார்பன் தடம் என்பது தீய எண்ணம் கொண்டவர்களால் உருவாக்கப்பட்ட ஒரு ஏமாற்று வேலை என்று குற்றம் சாட்டினார்.

மேலும், சட்டவிரோதக் குடியேற்றம் மற்றும் பசுமை எரிசக்தி கொள்கைகள் ஐரோப்பாவை அழித்து வருவதாகவும் டிரம்ப் குறிப்பிட்டார். இதனால் ஐரோப்பிய நாடுகள் தங்களின் பாரம்பரியத்தை இழந்து வருகின்றனர்” என்று டிரம்ப் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து, ஐநா அமைப்பு குறித்து விமரிசத்த டிரம்ப், ஐநா, வெறும் கடுமையான வார்த்தைகளை கொண்ட கடிதங்களை மட்டுமே எழுதுகிறது என்றும் வெறும் வார்த்தைகள் போரைத் தீர்க்காது என்று குற்றம் சாட்டினார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *