சீனாவிற்கு நிகராக சிவகாசி பட்டாசுகளை உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று சிவகாசியில் பட்டாசு உற்பத்தியாளர்களுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா தெரிவித்தார்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், பட்டாசு உற்பத்தியாளர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா கலந்து கொண்டு, பட்டாசு உற்பத்தியாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, பட்டாசு உற்பத்தியில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள்களை தவிர்ப்பது, புதிய உரிமம் பெறுவது, உரிமம் புதுப்பிப்பதில் உள்ள சிக்கல்களை தவிர்ப்பது, பட்டாசு ஏற்றுமதிக்கு வழிவகை செய்வது உள்ளிட்ட பல்வேறு கோரிக்களை உற்பத்தியாளர்கள் முன்வைத்தனர்.
கூட்டத்தை தொடர்ந்து. தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, சீனாவிற்கு நிகராக, சிவகாசி பட்டாசுகளை உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும். பட்டாசு தொழிலில் உள்ள சிக்கல்களை தவிர்ப்பதற்காக சட்டமன்றத்தில் பேசுவேன் எனவும், அமைச்சர் கீர்த்தனா தெரிவித்தார்.


