
மாநிலத்தில் செயல்படுத்தப்படும் மத்திய அரசுத் திட்டங்கள் எவ்வாறு செயல்படுகின்றன மற்றும் மக்களுக்கு அவை எவ்வாறு பயன்படுகின்றன என்பதைக் கண்காணிக்கும் பொறுப்பை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் மாநில அளவிலான வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு, திஷா கமிட்டி (DISHA) மேற்கொள்கிறது. இந்தக் கமிட்டியின் தலைவராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளார்.
இந்தக் குழுவின் ஆலோசனை கூட்டம் தலைமை செயலகத்தில் நடைபெற்றது. இதில் தி.மு.க., அ.தி.மு.க., வி.சி.க., ம.தி.மு.க. போன்ற பல்வேறு கட்சிகளின் பிரமுகர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தலைமைச்செயலாளர் முருகானந்தம், அமைச்சர் பெரியசாமி, எம்.பி.க்கள், டி.ஆர்.பாலு, செங்கோட்டையன், மாணிக்கம் தாகூர், துரை வைகோ, திருமாவளவன், நவாஸ் கனி, எம்.எல்.ஏ. எழிலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டார்.
ஏற்கனவே அ.தி.மு.க.வில் செங்கோட்டையன் பேச்சுக்கள், செயல்கள் அரசியல் களத்தில் பேசுபொருளாகி வரும் சூழலில் முதலமைச்சர் தலைமையிலான கூட்டத்தில் செங்கோட்டையன் பங்கேற்றதும் பேசுபொருளாக மாறி உள்ளது.
திஷா கமிட்டி உறுப்பினரான அ.தி.மு.க. எம்.பி. தம்பிதுரை பங்கேற்காத நிலையில் செங்கோட்டையன் பங்கேற்றுள்ளார்.
