பாதுகாப்பு முதல் விண்வெளி வரை! – மோடி காட்டிய அதிரடி!

பிரான்ஸ் அதிபர் மேக்ரோனுடனான சந்திப்பு, விதிவிலக்கிற்குரிய வகையில் மிகச் சிறந்த பலனைத் தந்துள்ளதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

பிரான்சில் நடைபெற்ற பாரத் இன்னோவேட்ஸ்-2026 என்ற கண்டுபிடி மற்றும் புத்தொழில் மாநாட்டு குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், தன் நண்பரும் பிரான்ஸ் அதிபருமான மேக்ரோனுடனான சந்திப்பு, விதிவிலக்கிற்குரிய வகையில் மிகச் சிறந்த பலனைத் தந்துள்ளதாகத் தெரிவித்தார்.
நமது இரு நாடுகளுக்கு இடையே நீண்டகாலமாக நிலவி வரும் நட்புறவின் அடிப்படையில், நமது உறவை விதிவிலக்கான விரிவான மூலோபாயக் கூட்டாண்மை என்ற நிலைக்கு உயர்த்த நாங்கள் முடிவு செய்துள்ளதாகக் கூறினார்.
பாதுகாப்பு, தொழில்நுட்பம், விண்வெளி, பாதுகாப்புப் பணிகள், பயங்கரவாத எதிர்ப்பு, கண்டுபிடிப்புகள் உள்ளிட்ட முக்கிய துறைகளில் நமது ஒத்துழைப்பை மேலும் ஆழப்படுத்துவதற்கான வழிகள் குறித்து தங்களது விவாதங்கள் அமைந்திருந்ததாகத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *