Advertisements

கலசப்பாக்கத்தில் அரசு சார்பில் புதிதாகக் கட்டப்பட்ட கட்டிடங்களை சட்டமன்ற உறுப்பினர் சரவணன் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வந்தார்.
திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கத்தில் உள்ள பழங்கோவில், பில்லூர், மேலாரணி ஆகிய ஊராட்சிகளில் 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம், அங்கன்வாடி மைய கட்டிடம், நியாய விலை கட்டிடம் உள்ளிட்ட கட்டிடங்கள் புதிதாகக் கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது.
விழாவில், சட்டமன்ற உறுப்பினர் சரவணன் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி திறந்து வைத்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வந்தார். இந்நிகழ்வில், ஒன்றிய செயலாளர்கள் சுப்பிரமணியம், சிவக்குமார், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் அன்பரசி, ஒன்றிய அவைத்தலைவர் ராமமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
Advertisements



