
வருவாய்த் துறையில் அடுத்த மூன்று மாதங்களில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படும் என்று கோவையில் வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். கோவை விமான நிலையத்தில், வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது, அறிவாலயத்தில் வேறு கட்சியிலிருந்து வந்த ஒருவருக்கு விழா எடுத்து, சாதனை சரித்திரம் படைத்ததாக கூறிய அவர், எங்களுக்கு ஆள் பிடிக்கும் வேலை இல்லை, எங்கள் தலைவரை நோக்கி மக்கள் தாமாகவே வருகிறார்கள் என்றும், அ.தி.மு.க.வும் தி.மு.க.வும் இணைந்து முதலமைச்சராக வேண்டும் என்ற நிலையை உருவாக்க முயற்சித்தார்கள். அந்த சூழ்நிலையை முறியடித்தவர் எங்கள் தலைவர் ஜோசப்விஜய் என்றும் செங்கோட்டையன் தெரிவித்தார்.
மேலும், வருவாய்த் துறை குறித்து பேசிய அவர், போதுமான பணியாளர்களை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், வருவாய்த் துறையில் அடுத்த மூன்று மாதங்களில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படும். அதை நீங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.




