முதலமைச்சர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு – மீண்டும் ஒத்திவைப்பு!

Advertisements

முதலமைச்சர் விஜய் மனைவி சங்கீதா தொடர்ந்த விவாகரத்து வழக்கு இன்று விசாரணைக்கு வர இருந்த நிலையில் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.

முதலமைச்சர் மற்றும் தவெக தலைவரான விஜய்க்கும், அவரது மனைவி சங்கீதாவுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, சங்கீதா செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்திருந்தார். முன்னதாக இந்த மனுவை விசாரித்த செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றம், வழக்கைக் கடந்த ஏப்ரல் 20-ம் தேதிக்குத் தள்ளி வைத்திருந்தது. அன்றைய தினம் விஜய் மற்றும் சங்கீதா ஆகிய இருவருமே நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகவில்லை. அவர்களுக்குப் பதிலாக அவர்களது வழக்கறிஞர்கள் மட்டுமே ஆஜரானார்கள்.

இதனைத் தொடர்ந்து, வழக்கின் விசாரணையானது ஜூன் 15-ம் தேதிக்கு (இன்று) ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கை நீதிமன்றம் மீண்டும் ஆகஸ்ட் 7-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. விஜய் முதலமைச்சராகப் பதவியேற்ற பிறகு இந்த வழக்கு முதல் முறையாக விசாரணைக்கு வருவதால், அவர் நேரில் ஆஜராவாரா என்ற பெரும் எதிர்பார்ப்பு பொதுமக்களிடையே எழுந்துள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *