சாலை விபத்தில் உயிரிழந்த கோட்டாட்சியர் குடும்பத்திற்கு நிவாரண நிதியாக 10 லட்ச ரூபாய் வழங்கப்படும்!

Advertisements

திருச்சி அருகே சாலை விபத்தில் உயிரிழந்த கோட்டாட்சியர் குடும்பத்திற்கு நிவாரண நிதியாக 10 லட்ச ரூபாய் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

திருச்சி மாவட்டம் கடியாக்குறிச்சி அருகே நடந்த சாலை விபத்தில் முசிறி வருவாய் கோட்டாட்சியர் ஆரமுத தேவசேனா பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்நிலையில் அவரது குடும்பத்திற்கு,  அரசு ஊழியர்களுக்கான காப்பீட்டு தொகை 1 கோடி ரூபாய் வழங்கப்படும்  என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும், பொது நிவாரண நிதியில் இருந்து 10 லட்ச ரூபாயை வழங்கபட உள்ளதாகவும் தெரிவித்தார்.

அதேபோல் குடும்ப பாதுகாப்பு நிதியில் இருந்து .5 லட்ச  ரூபாய் வழங்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளார். உயிரிழந்த கோட்டாட்சியர் குடும்பத்தினருக்கு, ஆழ்ந்த இரங்கலை  தெரிவித்துக்கொள்வதாகவும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *