
சென்னையில் உள்ள வானகரத்தில் வரும் 26ம் தேதி அ.தி.மு.க.வின் பொதுக்குழு, செயற்குழு கூட்டங்கள் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
அதிமுக அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமையில் வருகின்ற (26.12.2023) செவ்வாய்க்கிழமை செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது.
சென்னை: அடுத்தஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெறஉள்ளது.இதையொட்டி பல்வேறு கட்சியினரும் நாடாளுமன்ற தேர்தல் பணிகளில் மும்முரம் காட்டிவருகின்றனர்.அந்தவகையில்
இது குறித்து அஇஅதிமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம், கழக சட்ட திட்ட விதிகள் 19 (7) மற்றும் 25 (2)-ன்படி, வருகின்ற (26.12.2023) செவ்வாய்க்கிழமை காலை 10.35 மணிக்கு, சென்னை, வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில், கழக அவைத் தலைவர் அ.தமிழ்மகன் உசேன் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது.
கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் தனித் தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படும். உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கு அனுப்பப்படும் அழைப்பிதழுடன் தவறாமல் வருகை தந்து, கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


