நாமக்கல் சாலை விபத்தில் 4 மாணவிகள் பலி – குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி!

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே தனியார் கல்லூரி பேருந்து மோதியதில், மொபட்டில் சென்ற 4 மாணவிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

எலச்சிபாளையம் அருகே சக்கராம்பாளையம் பிரிவு சாலையில் இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரிகள் மூவர் மற்றும் அவர்களது உறவினர் சிறுமி என 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

உயிரிழந்தவர்களில் 19 வயதான சுபிதா கலைச்செல்வி கல்லூரி மாணவி என்பதும், அவரது தங்கைகள் நிவேதிதா மற்றும் தனுஸ்ரீ பள்ளி மாணவிகள் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவர்களுடன் சென்ற 12 வயது அபிநயாவும் விபத்தில் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், விபத்து தொடர்பாக எலச்சிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், உயிரிழந்த 4 மாணவிகளின் குடும்பங்களுக்கும் தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 சகோதரிகள் உட்பட 4 மாணவிகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *