நாதக கட்சி வேட்பாளர் கார்த்திகாவுக்கு ஆதரவாக மு.க ஸ்டாலின்.!

தாராபுரம் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகாவைத் த.வெ.க. அரசு கைது செய்திருப்பதற்குத் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைத் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலின்போது தொடுக்கப்பட்ட வழக்கு காரணமாக, நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கார்த்திகாவைத் த.வெ.க. அரசு கைது செய்திருப்பதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த பெண்கள் பொதுவாழ்க்கையில் ஈடுபடுவதை, கொள்கை மாறுபாடுகளுக்கு அப்பால் வரவேற்று ஊக்கமளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

சகிப்புத்தன்மையும் ஜனநாயக உணர்வும் இல்லாத சர்வாதிகார அரசாகத் த.வெ.க. அரசு நடந்துகொள்வதாகக் குற்றம் சாட்டியுள்ளார். குற்றவாளிகளைக் காப்பாற்றிப் போராடுவோரைக் கைது செய்வதில் இரண்டு பேருக்கு நடுவில்தான் போட்டி என்றும், ஒன்று தில்லி பா.ஜ.க., அரசு என்றும், இன்னொன்று தமிழ்நாட்டில் த.வெ.க அரசு என்றும் தெரிவித்துள்ளார்.

கார்த்திகாவையும் அவர் கட்சியினரையும் நிபந்தனை இன்றி விடுதலை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *