Israel Hamas War Updates: மருத்துவமனை மூடப்பட்டதால் 3 குழந்தைகள் பலி!

Advertisements

இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதல் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 3 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் தொடர்ந்து வருகிறது. வடக்கு காசாவில் அமைந்துள்ள பெரிய அல்-ஷிபா மருத்துவமனை மீது இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது.

Advertisements

இந்த போர் காரணமாக, காசா மிகவும் மோசமான நிலையில் உள்ளது. காசாவில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்ட நிலையில், ஆயிரக்கணக்கான மக்கள் காசாவில் சிக்கியுள்ளனர்.

அங்குள்ள மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள், மருத்துவ வசதிகள், தண்ணீர், உணவு போன்றவை கிடைப்பதில் மிகவும் சிரமமான நிலை  ஏற்பட்டுள்ளது. பல நாட்டினரும் காசாவில் உள்ள மக்களுக்கு உதவ முன்வந்தாலும், அவர்கள் வழங்கும் உதவிகள் எல்லையை கடந்து காசாவை சென்று சேர்வதில் கடும் சிரமம் உள்ளது.

வடக்கு காசா பகுதியில் ஷில் அபா மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனை மிகப்பெரிய மருத்துவமனை ஆகும். இந்த மருத்துவமனையில் குழந்தைகள், பெண்கள் உள்பட பலரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இந்த மருத்துவமனை உள்ள பகுதியில் இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன் காரணமாக அந்த மருத்துவமனைக்கு வழங்கப்பட்ட சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதல் காரணமாக அந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 3 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *