நீர்மின் திட்டச் சுரங்கப்பாதையில் அதிசயம் – 10 நாட்களுக்குப் பிறகு இருவர் உயிருடன் மீட்பு!

Advertisements

நேபாளத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுப் பத்தாம் நாளில் திரிசூரி நீர்மின் திட்டச் சுரங்கப்பாதையில் சிக்கியிருந்த இருவரை மீட்புக்குழுவினர் உயிருடன் மீட்டுள்ளனர்.

திபெத்தில் பனிப்பாளங்கள் உருகி நேபாளத்தின் ஆறுகளில் திடீர்ப் பெருவெள்ளம் பாய்ந்ததால் பேரழிவு ஏற்பட்டது. இதனால் ஆயிரத்து இருநூற்றுக்கு மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஐயாயிரத்துக்கு மேற்பட்டோரைக் காணவில்லை. இந்நிலையில் திரிசூலி நீர்மின் திட்டத்துக்கான சுரங்கப்பாதையில் சிக்கிய இருவரை மீட்புக்குழுவினர் பத்தாம் நாளில் மீட்டுள்ளனர். அவர்களுக்குத் தேவையான மருத்துவம் அளிப்பதற்காக உடனடியாக அங்கிருந்து கொண்டுசென்றனர். இந்தக் காட்சியை நேபாள நீர்வளத்துறை வெளியிட்டுள்ளது.
வெள்ளப்பெருக்கின்போது சுரங்கப்பாதையில் சிக்கிக்கொண்டவர்கள் பத்தாம் நாளில் உயிருடன் மீட்கப்பட்டது பெரும் வியப்பையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *