நடிகர் ரஜினியுடன் செல்பி எடுத்த அனுபவத்தை நடிகை கயாடு லோஹர் பகிர்ந்துள்ளார்.
பிரபல நடிகை கயாடு லோஹர் டிராகன், பள்ளிச்சட்டம்பி,இதயம் முரளி’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இதற்கிடையில், சமீபத்திய விமானப் பயணத்தின்போது நடிகர் ரஜினிகாந்தை தற்செயலாக சந்தித்த நடிகை கயாடு லோஹர், அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
இது தொடர்பாக பேசிய கயாடு லோஹர், நடிகர் ரஜினியின் இருக்கைக்கு சென்று, ‘தான் டிராகன் படத்தின் கதாநாயகி என அறிமுகப்படுத்திக்கொண்டதாகத் தெரிவித்தார். இதன் பின்னர் அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டதாகத் தெரிவித்தார். பிறகு அவரே தன்னிடம், போட்டோ சரியாக வந்திருக்கிறதா என சரி செய்துகொள்ளுமாறு அறிவிறுத்தியதாகக் கூறினார்.

