நாடு முழுவதும் விஜய தசமி, தசரா விழா கோலாகலமாக கொண்டாட்டம்.!

நாடு முழுவதும் உள்ள கோவில்களில் விஜய தசமி, தசரா விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. ஏராளமான பக்தர்கள் வரிசையில் நின்று வழிபட்டுச் செல்கின்றனர். தசரா விழாவில் பத்தாம் நாளான இன்று விஜய தசமி கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி நாடு முழுவதும் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது.கர்நாடக மாநிலம் மைசூரில் நடைபெற்ற தசரா விழாவில் பட்டத்து யானை, குதிரை, ஆயுதங்கள் ஆகியவற்றுக்குப் பூசை செய்யப்பட்டது. இதில் அரச குடும்பத்தினரும், அரண்மனை அலுவலர்களும் கலந்துகொண்டனர்.

தெலங்கானா தலைநகர் ஐதராபாத் அம்பர்பேட்டையில் உள்ள மகாகாளி கோவிலில் தசரா விழாவையொட்டிச் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

உத்தரப் பிரதேசம் மதுராவில் விஜயதசமி நாளில் சரஸ்வத் பிராமணர்கள் சிவலிங்கத்துக்கும் இராவணன் சிலைக்கும் தீபாராதனை செய்து வழிபாடு நடத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *