தாய்லாந்து, சிங்கப்பூர் மற்றும்  சீனா நாடுகளில், கொராணா நோய் தொற்று பரவல் அதிகரிப்பு.!

Advertisements

தாய்லாந்து, சிங்கப்பூர் மற்றும்  சீனா நாடுகளில், கொராணா நோய் தொற்று காரணமாக பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

2019-ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் சீனாவின் உகான் நகரில் ஏற்பட்ட கொரோனா தொற்று பல நாட்டிலுள்ள மக்களுக்கும் பரவியதில் லட்சகணகான மக்கள் உயிரிழந்தனர்.

இதனை தொடர்ந்து தடுப்பூசிகள் கண்டறியப்பட்டு, மக்களுக்கு அளிக்கப்பட்ட பின் நோய்பரவல் குறைந்தது. இந்நிலையில் 5 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கொரானா நோய் தொற்று பரவி  ஹாங்காங், சிங்கப்பூர், சீனா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் தொற்று காரணமாக பாதிக்கப்பட்ட மக்கள் மருத்துவ மனையில் சிசிச்சை பெற்று வருகின்றனர்.

ஹாங்காங்கில் 31 பேருக்கு நோய் தெற்று ஏற்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இதேபோல் சிங்கப்பூரில் 28 சதவீதம் மக்கள் கொரோனா நோய் தொற்று ஏற்பட்டு பாதிப்படைந்துள்ளனர்.

மேலும 14,200 பேருக்கு புதிய பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. சீனாவில் மே 4-ந்தேதி வரையிலான 5 வார முடிவில் தொற்று விகிதம் இரட்டிப்படைந்து உள்ளதாக  சீன நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்து உள்ளது.   நாளுக்கு நாள் ஆசியாவில் உள்ள அண்டை நாடுகளில் கொரோனா தொற்று விகிதம் அதிகரித்து வருவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *