மத்திய அமைச்சர் சி.ஆர். பாட்டீலை சந்தித்தார் டி.கே.சிவகுமார்..!

மத்திய நீர்வளத்துறை அமைச்சர் சி.ஆர். பாட்டீலை சந்தித்த, கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவகுமார்  மேகதாது அணை திட்டத்திற்கு அனுமதி வழங்க வேண்டும் என வலipயுறுத்தி கோரிக்கை மனுவை அளித்தார். மேகதாது அணை திட்டத்திற்கு எதிராக, தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

இதனையடுத்து, மேகதாது அணை திட்டத்திற்கு விரைந்து அனுமதி வழங்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடியிடம் கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவகுமார் கோரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில், டெல்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்ற கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவகுமார், மேகதாது அணை விவகாரம் குறித்து, பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்துப் பேசினார்.

அப்போது, மேகதாது அணை விவகாரத்தில், தமிழக அரசு தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்ததாகவும், அணை கட்டுவதில் எவ்விதத் தடையும் இல்லை எனக் கூறி, திட்டத்திற்கு விரைந்து அனுமதி வழங்க வேண்டும் என பிரதமர் நரேந்திரமோடியிடம் டி.கே. சிவகுமார் வலியுறுத்தினார்.

இந்த நிலையில், மத்திய நீர்வளத்துறை அமைச்சர் சி.ஆர். பாட்டீலை சந்தித்த, கர்நாடக முதலமைச்சர் டிகே சிவக்குமார், மேகதாது அணை திட்டத்திற்கு அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோரிக்கை மனுவை அளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *