பணமேசடி காரணமாக கைது செய்யப்பட்ட நீரவ் மோடி, ஜாமீன் கோரி அளித்த மனு நிராகரிப்பு.!

பணமேசடி காரணமாக கைது செய்யப்பட்ட நீரவ் மோடி, ஜாமீன் கோரி அளித்த மனுவை லண்டன் ஐகோர்ட்டு நிராகரித்துள்ளது.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்த வழக்கில் வைர வியாபாரி நீரவ் மோடி கைது செய்யப்பட்டு லண்டன் வேண்ட்ஸ்வெர்த் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 3 ஆண்டுகளாக லண்டன் சிறையில் உள்ள அவரை இந்தியாவிற்கு அழைந்து வரும் முயற்ச்சியில் சிபிஐ ஈடுபட்டு வருகின்றனர்.

இதுதொடர்பான வழக்கு விசாரணை நேற்று லண்டன் ஐகோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஜாமீன் கோரி நீரவ் மோடி விண்ணப்பித்திருந்த நிலையில், தற்போது அவரது ஜாமீன் மனுவை லண்டன் ஐகோர்ட்டு, கிங்ஸ் பெஞ்ச் பிரிவு நிராகரித்துள்ளது. முன்னதாக வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கு கணிசமான மோசடி குற்றச்சாட்டை உள்ளடக்கியுள்ளது என தெரிவித்தது.

இதனை தொடர்ந்து நீரவ் மோடி தரப்பில் ஆஜராகியிருந்த வழக்கறிஞர் ஒருவர் இந்திய அரசு தரப்பிலிருந்து நீரவ் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், இந்தியா, அமெரிக்கா மற்றும் கனடாவில் உள்ள சீக்கியர்களை குறி வைத்து சதி திட்டங்களை தீட்டபட்டு வருவதாகவும் வாதிட்டார்.

இந்த வாதங்களை ஏற்றக்கொள்ளாத நீதிபதிகள் நீரவ் மோடி அளித்த ஜாமின் மனுவை நிராகரித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *