ஜிம்பாப்வே அணிக்கு 255 ரன்கள் இலக்கு..!

Advertisements
20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்று போட்டியில் ஜிம்பாப்வே அணியை 107 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
மும்பை வான்கடே மைதானத்தில் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்று போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ்- ஜிம்பாப்வே அணிகள் மோதின. இதில், டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி  20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 254 ரன்கள் குவித்தது.
 இதில், அதிரடியாக விளையாடிய ஹெட்மையர் 85 ரன்களும், ரோவ்மேன் பொவெல் 59 ரன்களும் விளாசினர். இதையடுத்து 255 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய ஜிம்பாப்வே அணி 17 ஓவரில் 147 ரன்கள் எடுத்து ஆல்அவுட்டானது. இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் 107 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *