
இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் ஈ உடலுக்கு முக்கியம், ஆனால் அதிகமாக எடுத்துக்கொள்வது ஆபத்தானது. மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக்கொள்வது உயிருக்கு ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும்.
உடல் செயல்பாடுகளுக்கு இரும்புச்சத்து மிக முக்கியமான வைட்டமின் என்பதில் சந்தேகமில்லை. இது ஆரோக்கியமான இரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்வதில் பெரும் பங்காற்றுகிறது.
அதுமட்டுமன்றி உடல் முழுவதும் ஆக்ஸிஜனை வழங்குகிறது. இரும்புச்சத்து குறைபாட்டைச் சப்ளிமெண்ட்ஸ் மற்றும் சிவப்பு இறைச்சி மற்றும் கோழி இறைச்சியை உட்கொள்வதன் மூலம் குணப்படுத்தலாம்.
இவை ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை. இருப்பினும், மருத்துவ ஆலோசனை இல்லாமல் இரும்புச் சத்துக்களை எடுத்துக்கொள்வது நல்லதல்ல, ஏனெனில் அளவுக்கு அதிகமான இரும்புச்சத்து எடுத்துக்கொள்வது மோசமான பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.
தேசிய சுகாதார நிறுவனங்களின் கூற்றுப்படி, அதிக அளவு இரும்புச் சத்துக்களை எடுத்துக்கொள்வது, குறிப்பாக வெறும் வயிற்றில் எடுத்துக்கொண்டால், வயிற்று வலி, மலச்சிக்கல், குமட்டல், வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும்.
மேலும், அதிக அளவு இரும்புச்சத்தை உட்கொள்வது வயிற்று வீக்கம் மற்றும் புண்கள் போன்ற உயிருக்கு ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும்.
இதன் பொருள் நூற்றுக்கணக்கான அல்லது ஆயிரக்கணக்கான மில்லிகிராம்கள் அதிக அளவு உட்கொள்வது உறுப்பு செயலிழப்பு, கோமா, வலிப்புத்தாக்கங்கள் மற்றும் மரணத்தைக் கூட ஏற்படுத்தும்.
தேசிய சுகாதார நிறுவனங்களின்படி, குழந்தைகளில் தற்செயலான இரும்புசத்து அதிகரித்து அது விஷமாக மாறி இறந்த செய்திகள் பல உள்ளன, எனவே உங்கள் குழந்தைகளுக்கு இரும்புச் சத்துக்களை மருத்துவரின் ஆலோசனையின்றி வழங்காமல் இருப்பது முக்கியம்.
இரும்புச்சத்து குறைபாட்டிற்கு சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக்கொள்வது செல்கள் மற்றும் திசுக்களைச் சேதப்படுத்தி ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை ஏற்படுத்தும்.
உடலில் அதிகப்படியான இரும்புச்சத்து கல்லீரல், இதயம் மற்றும் கணையத்தில் குவிகிறது. இதனால் மோசமான பாதிப்பை உண்டாக்கும்.
அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின்படி, பெரியவர்கள் மற்றும் 4 வயது, அதற்கு மேற்பட்ட குழந்தைகளுக்குப் பரிந்துரைக்கப்பட்ட தினசரி இரும்புச்சத்து 18 மில்லிகிராம் (மிகி) ஆகும்.
வைட்டமின் ஈ உங்கள் உடலுக்கு அவசியமான ஒரு ஊட்டச்சத்து ஆகும். இது இரத்தக் கட்டிகளைத் தடுப்பதிலும், செல்களை ஆக்ஸிஜனேற்ற சேதத்திலிருந்து பாதுகாப்பதிலும், நோயெதிர்ப்பு செயல்பாட்டை ஆதரிப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.
இருப்பினும், அதிகப்படியான வைட்டமின் ஈ எடுத்துக்கொள்வது புரோஸ்டேட் புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கக்கூடும். சில சந்தர்ப்பங்களில் அது மரணத்திற்கு வழிவகுக்கிறது.
JAMA நெட்வொர்க்கில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, வைட்டமின் E சப்ளிமெண்ட் ஆரோக்கியமான ஆண்களில் புரோஸ்டேட் புற்றுநோயின் அபாயத்தைக் கணிசமாக அதிகரிக்கின்றன.
ஒரு நிபுணரை அணுகாமல் வைட்டமின் ஈச்சப்ளிமெண்ட்களைத் தொடங்கக் கூடாது. ஏனெனில் இது அதிகப்படியான வைட்டமின் ஈ நச்சுத்தன்மையை ஏற்படுத்தும்.
இது ஆபத்தான அறிகுறிகளுக்கு வழிவகுக்கும். உணவுமூலம் வைட்டமின் ஈ சத்தைக் கூடுதலாக வழங்குவது எப்போதும் நல்லது. பொதுவாக மக்கள் ஒரு நாளைக்கு 15 மி.கி வைட்டமின் ஈ எடுத்துக்கொள்ளப் பரிந்துரைக்கப்படுகிறது.
FDA இன் படி பாதுகாப்பானதாகக் கருதப்படும் அதிகபட்ச தினசரி உட்கொள்ளல் ஒரு நாளைக்கு 1,100 மி.கி ஆகும்.
மருத்துவரிடம் ஆலோசிக்காமல் மல்டிவைட்டமின் மாத்திரைகளை உட்கொள்ளும் பழக்கம் மக்களிடம் உள்ளது, ஆனால் இது உயிருக்கு ஆபத்தானது.
மல்டிவைட்டமின்கள் உடலுக்கு ஒவ்வொரு நாளும் ஆற்றலை வழங்க உதவுகின்றன, ஆனால் சிறுநீரகங்களில் அதிகமாகச் சேரக்கூடும், இது சிறுநீரக கற்கள் மற்றும் இருதய பிரச்சனைகளின் அபாயத்தை அதிகரிக்கிறது.
