Advertisements

அமெரிக்காவை அழிக்க நினைப்பவர்களுக்கு மோசமான முறையில் மிக அதிகமான வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் சமூக வலைத்தளப் பதிவில், எந்த நாடாவது, அமெரிக்க உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புடன் விளையாட விரும்பினாலும், குறிப்பாக பல ஆண்டுகளாக அமெரிக்காவை அழிக்க நினைப்பவர்களுக்கும், மோசமான முறையில் மிக அதிகமான வரி விதிக்கப்படும் என்று தெரிவித்தார்.
இந்த வரி, தற்போது அந்நாடுகளின் பொருள்கள் மீது அமெரிக்கா விதித்த வரியை விட மிக அதிகமாக இருக்கும் என்று தெரிவித்தார். தொடர்ந்து, வரி விதிப்புக்கு அமெரிக்க நாடாளுமன்ற ஒப்புதலை நான் பெறத் தேவையில்லை என்றும், இந்த அனுமதிகள் உச்சநீதிமன்றத்தின் தீா்ப்புகளால் உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் கூறினார்.
Advertisements


