
தமிழக அமைச்சர்கள் ஊழல் புகாரில் சிக்கினால் அவர்களின் பதவி பறிக்கப்படும் என்று முதலமைச்சர் ஜோசப் விஜய் எச்சரித்துள்ளார்.
தமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்று முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் நடைபெற்றது. இதில் பொது பட்ஜெட், வேளாண் பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய முக்கிய அறிவிப்புகள் குறித்தும், புதிய தொழிற்சாலைகளுக்கு அனுமதி அளிப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. அத்துடன் புதிய திட்டங்களைத் தொடங்குவது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் அமைச்சர்களுக்குப் பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார். ஊழல் புகாரில் சிக்கும் அமைச்சர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தவறு செய்தால் அமைச்சர் பதவி பறிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
தனது தலைமையிலான தவெக அரசு வெளிப்படைத் தன்மை கொண்டதாக இருக்க வேண்டும் என்பதை அமைச்சர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.
பள்ளிகளுக்குச் சென்று ரீல்ஸ் போடுதல் உள்ளிட்ட செயல்களில் அமைச்சர்கள் ஈடுபடக் கூடாது என்றும், அரசு அலுவலகங்களுக்கும் பள்ளிகளுக்கும் ஆய்வு என்ற பெயரில் செல்வதை அமைச்சர்கள் தவிர்க்க வேண்டும் என்றும் விஜய் கேட்டுக்கொண்டார்.


