வன்னியர் வாக்குகள் நான்கு பிரிவாகச் சிதறுகிறதா?

Advertisements
திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்ததால் மிகப்பெரிய அதிர்ச்சியில் ஆழ்ந்திருக்கிறார் பாட்டாளி மக்கள் கட்சி தலைவரான அன்புமணி.
மருத்துவர் ராமதாஸ் நிறுவிய பாட்டாளி மக்கள் கட்சி தற்போது இரண்டாக உடைந்து இருக்கிறது. அன்புமணி தலைமையில் ஒரு பாட்டாளி மக்கள் கட்சியும் ராமதாஸ் தலைமையில் ஒரு பாட்டாளி மக்கள் கட்சியும் இயங்கி வருகிறது. இந்த நிலையில் தற்பொழுது அதிமுக பாஜக கூட்டணியுடன் அன்புமணி தரப்பிலான பாட்டாளி மக்கள் கட்சி இணைந்து இருக்கிறது வருகிற சட்டமன்றத் தேர்தலில் கிட்டத்தட்ட 15 தொகுதிகள் பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்படலாம் என தெரிகிறது.
இதனிடையே  அன்புமணிக்குத் தான் பாட்டாளி மக்கள் கட்சிசொந்தம் என தேர்தல் கமிஷன் அறிவித்ததாலும் அன்புமணி தரப்பின உற்சாகமடைந்தனர் .மற்ற கட்சிகள் போல் இழுப்பறி இல்லாமல் மிக எளிதான முறையில் அன்புமணி  தலைமையிலான பாட்டாளி மக்கள் கட்சி தனது  தொகுதி பங்கீடு பேசி முடித்து விட்டது. இது தவிர ஒரு ராஜ்யசபா பதவியும் பாட்டாளி மக்கள் கட்சிக்கு தருவதற்கு பேசப்பட்டு இருக்கிறது.
இந்த நிலையில் வடமாவட்டங்களில் வன்னியர்கள் செல்வாக்கு அதிகம் என்பதால் அன்புமணி தலைமையிலான பாட்டாளி மக்கள் கட்சிக்கு வட மாவட்டங்களில் பெரும்பாலான தொகுதிகளை ஒதுக்குவதற்கு திட்டமிடப்பட்டிருக்கிறது. அந்த வகையில் அன்புமணி மிகப்பெரிய கணக்கு போட்டு வைத்திருந்தார் அதாவது அதிமுக பாஜக பாமக ஆதியவற்றுடன் தேமுதிகவும் இணையும் எனவே தனக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என்று ஒரு கணக்கு போட்டு இருந்தார்.
இதற்கு முக்கிய காரணம் வடமாவட்டங்களில் தேமுதிக கட்சிக்கு மிகப்பெரிய செல்வாக்கு இருக்கிறது அங்குள்ள பெரும்பாலான வன்னியர்கள் திமுகவிலும் தேமுதிகவிலும் இருக்கிறார்கள்.தேமுதிக அதிமுகவுடன் இணையும் பொழுது அந்த ஓட்டு வங்கியும் தனக்கு சேர்த்து மிகப்பெரிய வெற்றி கிடைக்கும் என நம்பி இருந்தார்.ஆனால் தற்பொழுது தேமுதிக திமுகவுடன் கூட்டணி சேர்ந்து விட்டதால் விஜயகாந்த் தொண்டர்களின் வாக்கு தனக்கு கிடைக்காது என்பது தொடர்பாக அன்புமணி மனச்சோர்வடைந்திருக்கிறார்.
ஏற்கனவே பாட்டாளி மக்கள் கட்சி இரண்டாக பிரிந்த நிலையில் ஒரு தரப்பினர் ராமதாஸ் தலைமையில் செயல்பட்டு வருகின்றனர்.எனவே தற்பொழுது வடமாவட்டங்களில் ராமதாஸ் தலைமையிலான பாட்டாளி மக்கள் கட்சியையும் தேமுதிகவையும் எதிர்த்து போராட வேண்டிய சூழ்நிலைக்கு அன்புமணி தள்ளப்பட்டு இருக்கிறார்.தற்பொழுது வட மாவட்டங்களை பொறுத்தவரையில் வன்னியர்களின் வாக்கு தானாக சிதறுகிறது அதாவது அன்புமணி தரப்பிலான பாட்டாளி மக்கள் கட்சி ராமதாஸ் தலைமையிலான பாட்டாளி மக்கள் கட்சி திமுக மற்றும் தேமுதிக என நான்கு பிரிவாக வன்னியர்களின் வாக்கு பிரிகிறது.
எனவே வட மாவட்டங்களை பொறுத்தவரையில் அதிமுக பாஜக கூட்டணியை மட்டுமே நம்பி அன்புமணி தேர்தலில் போட்டியிடுகிறார்.ஏற்கனவே கடந்த முறை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து ஒருங்கிணைந்த பாட்டாளி மக்கள் கட்சி பல தொகுதிகளில் தோல்வியை சந்தித்தது என்பது குறிப்பிடத்தக்கது.தற்பொழுது கட்சி பிளவு பட்டிருக்கும் நிலையில் மேலும் வெற்றி வாய்ப்பு என்பது சந்தேகம் என்ற சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது.
இதனிடையே அன்புமணி தலைமையிலான பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது இதில் குறிப்பாக அன்புமணிக்கு வலதுகரமாக தற்பொழுது திகழும் வழக்கறிஞர் கே பாலு ஜெயங்கொண்டம் தொகுதியில் போட்டியிடுவார் என தெரிகிறது ஏற்கனவே கடந்த முறை தேர்தலில் அவர் ஜெயம் கொண்டம் தொகுதியில் போட்டியிட்டு குறைந்தபட்ச வாக்கு வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது மட்டுமல்லாமல் தற்போது சசிகலா தரப்பில் அவரது ஆதரவாளர்கள் போட்டியிடுவதால் அதிமுக அதிருப்தியாளர்களின் வாக்குகளும் அவர்களது ஆதரவும் அன்புமணிக்கு கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது.இது போன்ற சூழ்நிலைகளால் அன்புமணி அடுத்த கட்டமாக என்ன செய்வது என கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *