
Mini Handloom Park Kanchipuram: மக்களுக்கு மத்திய அரசாங்கம் நிதி தரவில்லை என்பது கூடத் தெரியாமல் எங்களைக் குறை கூறுகிறார்கள் என அமைச்சர் தா.மோ அன்பரசன் தெரிவித்தார்.
காஞ்சிபுரத்தில் கைத்தறி துறை சார்பில் ஓரிக்கை அருகே அமைந்துள்ள சரிகை ஆலை வளாகத்தில் 3 ஜோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட சிறிய அளவிலான கைத்தறி பூங்கா உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் துவக்க விழா இன்று நடைபெற்றது.
இவ்விழாவில் கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, குரு சிறு தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், ஆகியோர் கலந்துகொண்டு மூன்று கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட சிறிய அளவிலான கைத்தறி பூங்கா மற்றும் பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்தனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர்கள், தமிழ்நாட்டில் பருவ மழை பெய்தபொழுது காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் மட்டுமில்லாமல் தென் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் எவ்வளவு பாதிப்பு ஏற்பட்டது. மத்திய அரசு எவ்வளவு நிதி கொடுத்தார்கள் என மோடியிடம் கேள்வி கேட்கிறீர்களா ?. எல்லா மாநிலத்திற்கும் கொடுக்கிறீர்கள், தமிழ்நாட்டில் மட்டும் ஏன் கொடுக்கக் கேட்டீர்களா ? . எந்தெந்த திட்டம் என்று சொன்னால், நாங்கள் பதில் சொல்லப் போகிறோம். 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் மக்களுக்குப் பணம் தராமல் பாக்கி வைத்திருக்கிறார்கள். மக்களுக்கு மத்திய அரசாங்கம் நிதி தரவில்லை என்பது கூடத் தெரியாமல் எங்களைக் குறை கூறுகிறார்கள்.
வளர்ந்த மாநிலங்கள் பட்டியில் தமிழ்நாடு சேர்ந்து விட்டது எனக் கூறி மண்ணெண்ணெய் கூடக் கொடுப்பது கிடையாது. ஆனால் கூட்டுறவு கடைகளில் மண்ணெண்ணெய் தரவில்லையென மக்கள் நினைக்கிறார்கள். இதையெல்லாம் நாங்கள் மேடையில் பார்த்துக் கொள்கிறோம் என அமைச்சர் தா.மோ அன்பரசன் தெரிவித்தார்.




