
தில்லியில் நடைபெறும் செமிகண்டக்டர் மாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, சிப் தொழில்நுட்பம் குறித்து வல்லுநர்களிடம் கேட்டறிந்தார்.
இந்தியாவில் மின்னணுத் தொழில்நுட்பத்தில் புரட்சி ஏற்படுத்தும் வகையில் செமிகண்டக்டர் தயாரிப்பு ஆலைகள் நிறுவப்பட்டுள்ளன. இந்நிலையில் தில்லி யசோபூமியில் செமிகண்டக்டர் மாநாடு நேற்றுத் தொடங்கியது.
இந்த மாநாட்டில் பங்கேற்றுப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவில் தயாரிக்கப்படும் சிறிய மின்னணுச் சிப்கள், உலகில் பெரும் புரட்சியை ஏற்படுத்தப்போவதாகத் தெரிவித்தார்.
இந்நிலையில் இரண்டாவது நாளாக செமி கண்டக்டர் மாநாட்டுக்குச் சென்ற பிரதமர் மோடி தொழிலதிபர்களுடனும் தொழில்நுட்ப வல்லுநர்களுடனும் கலந்துரையாடினார்.
சிப் தயாரிக்கும் தொழில்நுட்பத்தை வல்லுநர்களிடம் அவர் கேட்டறிந்தார். வல்லுநர்களும் தொழிலதிபர்களும் தங்கள் திட்டம் குறித்துப் பிரதமருக்கு விளக்கமாக எடுத்துரைத்தனர்.

