
பிறந்து 10 மாதமே ஆன குழந்தைக்கு அறுவைச் சிகிச்சை இன்றிச் சிறுநீரகக் கற்களை அகற்றி மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை ஆராய்ச்சி மைய மருத்துவர்கள் 10 மாதமே ஆன பச்சிளம் குழந்தைக்கு அறுவைச் சிகிச்சை இல்லாமல் இரண்டு சிறுநீரகங்களிலும் இருந்த கற்களை அகற்றி உள்ளனர். இந்த சிகிச்சைக்குப் பிறகு குழந்தைக்குச் சிறுநீர் சீராக வெளியேறி வருகிறது. இதுகுறித்துச் சிறுநீரகவியல் முதுநிலை வல்லுநர் பால் வின்சென்ட், மருத்துவமனை நிர்வாகி கண்ணன், சிறுநீரகவியல் வல்லுநர் வேணுகோபால் கோணங்கி ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசினர். அப்போது, ஒரு வயதுக்குட்பட்ட பச்சிளம் குழந்தைகளுக்குச் சிறுநீரகக் கற்களை அகற்றப் பெரிய அறுவை சிகிச்சைகள் தேவைப்படுவதில்லை என்று தெரிவித்தார். லேசர் மற்றும் நவீனக் கருவிகள் மூலம் பெரியவர்களைப் போலவே குழந்தைகளுக்கும் திறம்படச் சிகிச்சை அளிக்கலாம் என்றும் தெரிவித்தார்.


