
த.வெ.க. அரசு சட்டம்-ஒழுங்கை பாதுகாப்பதில் முற்றிலும் தோல்வியடைந்துள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, ஆளுநர் உரையில் புதிய திட்டங்கள் மற்றும் முக்கிய அறிவிப்புகள் இடம்பெறவில்லை என குற்றம் சாட்டினார். தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தார். விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகளை அரசு நிறைவேற்றவில்லை என்றும், மேட்டூர் அணை நீர் திறப்பு மற்றும் காவிரி நீர் பெறுவதில் நடவடிக்கை இல்லை என்றும் கூறினார். மேலும், கட்டுமானப் பொருட்கள் விலை உயர்வு மற்றும் அறிவிக்கப்படாத மின்வெட்டால் மக்கள் பாதிக்கப்படுவதாக தெரிவித்தார்.தொடர்ந்து, தேர்தல் வாக்குறுதிகள் கவர்னர் உரையில் இடம்பெறாதது மக்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறியுள்ளார்.



