புயலின் தாக்கத்தால்,8 அடி உயரத்துக்கு எழும்பிய கடல் சீற்றம்..!

வங்கக் கடலில் நிலவும் புயலின் தாக்கத்தால் தரங்கம்பாடியில் 8 அடி உயரத்துக்கு மேல் அலைகள் ஆர்ப்பரித்து எழும்பின.

வங்கக்கடலில் உருவாகியுள்ள புயல் தமிழ்நாட்டின் வடகடலோர மாவட்டங்களை நெருங்கியுள்ள நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் கடல் கடுமையான சீற்றத்துடன் காணப்பட்டது. தரங்கம்பாடியில் கரையில் போட்டுள்ள கருங்கற்களைத் தாண்டி சுமார் 8 அடிக்கு மேல் அலைகள் ஆர்ப்பரித்து எழும்பின.
இதனால் தரங்கம்பாடி சுற்றுலா மையம் ஆள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடிக் காணப்பட்டது. மீனவர்கள் கரைகளில் பாதுகாப்பாகப் படகுகளை நிறுத்திவிட்டு வீடுகளிலேயே முடங்கி உள்ளனர்.  அவ்வப்போது மிதமான மழையும் கனமழையும் பெய்தது. தரங்கம்பாடி அடுத்த சின்னங்குடி மக்கள் தங்கள் படகுகளை கரையோரத்தில் பாதுகாப்பாகக் கட்டி வைத்திருந்தனர். ஐந்து அடி உயரம் வரை அலைகள் எழுந்ததால் கடல் நீர் ஊருக்குள் புகுந்துவிடுமோ என்று மீனவர்கள் அச்சமடைந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *