தமிழக சட்டபேரவையின் முதல் கூட்டத்தொடரில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முன்னுரிமைக் கொடுத்து தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டதாக அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் ராஜ்மோகன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, தமிழ் எங்கள் பேச்சு என்றும் தமிழ் எங்கள் மூச்சு என்றும் தெரிவித்தார். சட்டசபைக் கூட்டத்தொடரில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முன்னுரிமைக் கொடுத்து தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டதாகக் கூறினார்.
தொடர்ந்து, சட்டசபை வளாகத்தில் எதிர்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதைக் குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், எதிர்கட்சிகள் அவர்களின் எதிர்ப்பை காட்டலாம் என்று தெரிவித்தார். இதேபோல் அவர்கள் போன ஆட்சியில் வந்துருக்க வேண்டும் என்று விமர்சித்தார். விரைவில், அரசின் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்..

