தூத்துக்குடியில் தமிழ்நாடு திருக்கோவில் கடைகள் கட்டிட வாடகைதாரர்கள் நலச் சங்கங்களின் பேரமைப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தமிழ்நாடு திருக்கோவில் கடைகள் கட்டிட வாடகைதாரர்கள் நலச் சங்கங்களின் பேரமைப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில், மாநிலத் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார்.
இக்கூட்டத்தில், வணிக நோக்கத்திற்கான கட்டிடங்களுக்கு 0.30 விழுக்காடும், வணிக நோக்கத்திற்கான மனைகளுக்கு 0.15 விழுக்காடாகக் குறைக்க வேண்டும் என்று தமிழக முதல்வரிடமும் கோரிக்கை வைத்துள்ளோம் என்று தெரிவிக்கப்பட்டது. எளிய முறையில் பெயர் மாற்றம் செய்து கெடுக்க வேண்டும், மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை 15 விழுக்காடு வாடகை உயர்வினை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.



