முடிவுக்கு வந்த ‘சுந்தரி’ சீரியல் !

Advertisements

’சுந்தரி’ சீரியல் முடிவுக்கு வந்த கையோடு நடிகை கேப்ரியல்லா தன் ரசிகர்களுக்குக் குட் நியூஸ் சொல்லியிருக்கிறார்.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று ‘சுந்தரி’. இதில் சமூகவலைதள பிரபலம் கேப்ரியல்லா கதாநாயகியாகச் சின்னத்திரைக்குள் அடியெடுத்து வைத்தார். அதற்கு முன்பு, ’ஐரா’, ‘கபாலி’, ‘காஞ்சனா3’ உள்ளிட்ட படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். ‘சுந்தரி’ சீரியல் நல்ல வரவேற்பைப் பெற்ற பின்பு இரண்டாம் பாகத்தையும் உடனே தொடங்கினார்கள். இப்போது ‘சுந்தரி’ சீரியலின் இரண்டாம் பாகமும் முடிவுக்கு வந்துள்ளது.

இந்தச் சீரியலுக்கு நல்ல வரவேற்பு இருக்கும்போதே ஏன் முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என ரசிகர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு விடை கிடைத்துள்ளது. அதாவது, கேப்ரியல்லா தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை அறிவித்துள்ளார். இதனால்தான் அவர் சீரியலிலிருந்து விலக முடிவெடுத்ததால் சீரியலையும் முடிவுக்குக் கொண்டு வந்திருக்கிறார்கள் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவர் கணவருடன் விவாகரத்து பெற்று விட்டார் என்றெல்லாம் செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது.

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *