இந்தியாவுக்குப் பாகிஸ்தான் அமைச்சரின் பகிரங்க மிரட்டல்!

தங்களது நதிநீர் உரிமைகளை பறிக்கும் முயற்சிப்பவர்களின் கைகளை வெட்டுவோம் என பாகிஸ்தான் அமைச்சர் முசாதிக் மாலிக் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுடன் சிந்து நதி நீரை பகிரும் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்தது. மேலும், சிந்துவின் கிளை நதியான செனாப் மீது அணை கட்டவும் இந்தியா தீவிரம் காட்டி வருகிறது. சிந்து மற்றும் அதன் கிளை நதிகளின் நீரை நம்பியே பாகிஸ்தானின் பெரும்பாலான விவசாயம், மற்றும் பிற தேவைகள் உள்ளதால்  அந்நாடு பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது.

இதுதொடர்பாக, இஸ்லாமாபாத்தில் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் முசாதிக் மாலிக் செய்தியாளர்களிடம் பேசியபோது, தங்கள் நாட்டுக்கான நதிநீர் விநியோகத்தை பிரதமர் மோடி தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாகவும் பாகிஸ்தானுக்கு ஒரு சொட்டுத் தண்ணீரைக் கூட விடமாட்டேன் என்று அவர் கூறி வருவதாகவும் தெரிவித்தார். தங்களது நதிநீர் உரிமைகளுக்கு ஆபத்து விளைவிக்க முயற்சித்து, தங்கள் பங்கையும் எடுத்துக்கொள்பவர்களின் கைகளை  வெட்டுவோம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் அரசு சர்வதேச நதிநீர் நிபுணர்கள் மற்றும் வெளிநாட்டுப் பிரதிநிதிகள் பங்கேற்கும் மாநாட்டை இஸ்லாமாபாத்தில் நடத்த உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *