இதை இந்தியா செய்யும் என எதிர்பார்க்கவில்லை – ரஸ்யா அறிவிப்பு..!

இந்தியா ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தும் நாங்கள் எதிர்பார்க்கவில்லை என்று ரஷ்ய உயர் அதிகாரி ரோமன் பாபுஷ்கின் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதால் இந்திய பொருட்கள் மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் ஐம்பது சதவீதம் வரி விதித்துள்ளார். இதில், ரஷ்ய உயர் அதிகாரி ரோமன் பாபுஷ்கின் செய்தியாளர்களிடம் பேசியபோது, இந்தியா ரஷியாவிடம் இருந்து எண்ணெயை வாங்குவதை நிறுத்தினால் என்னச் செய்வீர்கள் என்று நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கு பதிலளித்தப் பாபுஷ்கின், இந்தியா ரஷ்ய எண்ணெயை வாங்க மறுத்தால், அது பொதுவாக மேற்கு நாடுகளுடன் சமமான ஒத்துழைப்புக்கு வழிவகுக்காது என்று கூறியுள்ளார்.

இதில், அவர்கள் தங்கள் சொந்த நலனைப் பற்றி சிந்தித்து செயல்படுவதாகத் தெரிவித்தார். மேலும், இந்த அழுத்தம் நியாயமற்றது மற்றும் ஒருதலைப்பட்சமானது எனவும் இந்தியா ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *