
கரூரில் நேர்ந்த கூட்டநெரிசலில் உயிரிழந்தோர் குடும்பத்துக்குப் பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள அறிக்கையில், தமிழ்நாட்டின் கரூரில் ஓர் அரசியல் பேரணியின் போது நிகழ்ந்த துயரமான சம்பவம் மிகவும் வருத்தம் அளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிகழ்வில், தங்கள் அன்பிற்குரியவர்களை இழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தனது இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் கடினமான காலக்கட்டத்தில் அவர்கள் மன வலிமையைப் பெற விரும்புவதாகவும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையப் பிரார்த்தனை செய்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.


