நடிகை நயன்தாராவின் புதிய படம் அறிவுப்பு !

Advertisements

நடிகை நயன்தாராவின் புதிய படம் குறித்தான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இன்று நடிகை நயன்தாரா தனது 40ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவரது பிறந்தநாளை ஒட்டி நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் ‘நயன்தாரா ஃபியாண்ட் தி ஃபேரிடேல்’ டாக்குமெண்ட்ரி இன்று காலை வெளியாகி இருக்கிறது. இதுமட்டுமல்லாது அவரது புதிய படம் ‘ராக்காயி’ டீசரும் வெளியாகியுள்ளது. இதில் தனது பெண் குழந்தையைத் தீயவர்களிடமிருந்து காக்க போராடும் தாயாக ஆக்‌ஷன் அவதாரம் எடுத்திருக்கிறார்.

இதன் டீசரில் நயன்தாராவின் ஆக்‌ஷன் காட்சிகளைப் பார்த்த ரசிகர்கள் அவரைப் பாராட்டி வருகின்றனர். செந்தில் நல்லசாமி இயக்கும் இந்தப் படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். கடந்த சில வருடங்களாகவே ஹீரோயின் செண்ட்ரிக் படங்களில் நடிப்பதில் ஆர்வம் செலுத்தும் நயன்தாரா ‘ராக்காயி’ படத்திலும் தன்னை முன்னிலைப்படுத்தியே நடித்துள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *