இர்ஃபான் ‘ஆக்‌ஷனும்’… மா.சுப்பிரமணியன் ‘ரியாக்‌ஷனும்’!

Advertisements

பிரபல யூடியூபரான இர்ஃபானுக்கு சர்ச்சையில் சிக்குவது என்றால் சர்க்கரைப் பொங்கல் தான். கருவில் இருக்கும்போதே தனது குழந்தையின் பாலினத்தை அவர் வெளியிட்டது பலராலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. அடுத்து, தனது மனைவியின் பிரசவத்தின்போது குழந்தையின் தொப்புள்கொடியை தானே கத்தரிக்கோலால் வெட்டுவது போன்ற காணொலியை வெளியிட்டு அடுத்த சர்ச்சையில் சிக்கினார்.

இந்த விவகாரத்தில் இர்ஃபான், சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனை, மருத்துவருக்கு விளக்கம் கேட்டுச் சுகாதாரத் துறை நோட்டீஸ் அனுப்பியது. சமூக வலைதளங்களில் இர்ஃபானுக்கு எதிரான கருத்துகள் வலுக்கவே, தனது செயலுக்கு ‘வருத்தம்’ தெரிவித்து சுகாதாரத் துறைக்குக் கடிதம் அனுப்பினார் இர்ஃபான்.

“மன்னிப்புக் கேட்டாலும் இம்முறை இர்ஃபான் மீது நடவடிக்கை நிச்சயம்” என்றார் சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியன். அதிகாரிகளும், கையில் கிடைத்தால் பிழிந்துவிடுவோம் எனச் சொன்னார்கள். இதற்கெல்லாம் அசராத இர்ஃபானோ, நெப்போலியன் மகன் தனுஷ் திருமண விழாவைக் கூலாகத் தொகுத்து வழங்கிக்கொண்டிருந்தார். இப்போது, “இர்ஃபானுக்கு ஏற்கெனவே நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். இது ஒன்றும் கொலைக் குற்றமல்ல” என்று ஏட்டைத் திருப்பி இருக்கிறார் மாண்புமிகு மா.சுப்பிரமணியன்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *