“மணிமண்டபம் அமைக்க முதலமைச்சர் விஜயைச் சந்திக்கவும் தயார்!” – வைரமுத்து அதிரடி!

பாரதிராஜா நினைவு இடத்தில் மணிமண்டபம் அமைக்க முதலமைச்சர் விஜயைச் சந்திக்கத் தயங்கமாட்டேன் என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

கவிஞர் வைரமுத்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் மறைந்த இயக்குநர் பாரதிராஜாவின் நினைவிடத்திற்கு சென்றது குறித்து பதிவிட்டுள்ளார். அதில், மண்ணை இழுத்துப் போர்த்திப் படுத்திருக்கும் உன்னை மழையோ புயலோ ஒன்றும் செய்யாது என்று குறிப்பிட்டுள்ளார். இதே இடத்தில் தன்னோடு நின்று இறுதி மரியாதை செலுத்திய சீடன் பாக்யராஜும் உனைத்தேடி வந்துவிட்டதாகக் கூறியுள்ளார்.

இதன் காரணமாக, ஜோடிக் குதிரைகளை இழந்து, கவிழ்ந்து கிடக்கிறது கலைத்தேர் என்று தெரிவித்துள்ளார். பாரதிராஜா நினைவு இடத்தில் மணிமண்டபம் அமைக்க முதலமைச்சர் விஜயைச் சந்திக்கவும் தயங்கமாட்டேன் என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *