இலங்கையை புரட்டிப் போட்ட டிட்வா புயல்: உயிரிழப்பு 85-ஆக அதிகரிப்பு!

இலங்கையை புரட்டிப் போட்ட டிட்வா புயலால் நிலச்சரிவு ஏற்பட்டு 85 பேர் உயிரிழந்துள்ளனர்.

இலங்கையில் டிட்வா புயல் காரணமாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன், காரணமாக ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடிய நிலையில், பல நகரங்கள் வெள்ளக்காடாக மாறின. இதைத்தொடர்ந்து, நிலச்சரிவால் ஏராளமான வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. இதில், ஏராளமான பொதுமக்கள் உயிரிழந்த நிலையில், சிலர் மாயமானர். பின்னர், இந்த சம்பவம் தொடர்பாக மீட்பு படையினர் தேடும் பணியில்  ஈடுபட்டனர். இந்நிலையில், வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 85 உயிரிழந்துள்ளனர் எனத் தகவல் வெளியாகி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *