
தேசிய அளவில் அரசின் முயற்சிகளால் மருத்துவம் பெறுவதற்கான மக்களின் செலவு குறைந்துள்ளதாகக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலம் தியோகரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியின் முதலாவது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது, தேசிய அளவில் அரசின் முயற்சிகளால் நலவாழ்வு தொடர்பான மக்களின் செலவுகள் குறைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
பெரிய மருத்துவ நிறுவனங்களின் மருத்துவர்கள் அமைப்பு முறையிலும், தனிப்பட்ட முறையிலும் இதில் சிறப்பான பங்காற்றுவதாகவும் திரௌபதி முர்மு தெரிவித்தார்.



