ரஜினிகாந்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது..!

கோவாவில், நடைபெற்ற இந்திய சர்வதேச திரைப்பட விழாவில், நடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது.

கோவாவில் 56 ஆவது இந்திய சர்வதேச திரைப்பட விழா நடைபெற்றது. இந்த, விழாவில் நடிகர் ரஜினிகாந்த், திரைத்துறையில் அறிமுகமாகி 50 ஆண்டுகளை நிறைவு செய்ததையொட்டி, அவருக்கு வாழ்நாள் சாதனையாளருக்கான விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, நடிகர் ரஜினிகாந்த் விருது பெற்றது குறித்து பேசியப் போது, என்னை வாழவைக்கும் தெய்வங்களான தமிழ் மக்களுக்கு எனது மணமார்ந்த நன்றி எனக் கூறினார். இந்நிகழ்ச்சியில், மத்திய இணையமைச்சர் எல். முருகன், கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *