Women’s Self Help Group Scam: 3 பேருக்கு 7 ஆண்டு சிறை!

மகளிர் சுய உதவிக்குழு பெண்களிடம் பணம் மோசடி செய்த தனியார் அறக்கட்டளை நிர்வாகி உட்பட 2 பெண்களுக்கு தலா 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.46 லட்சம் அபராதம் விதித்து சென்னை எழும்பூர் பெருநகர தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை கொளத்தூர் டீச்சர்ஸ் காலனி 5-வது மெயின் ரோட்டில் ஆப்ரோ டிரஸ்ட் மற்றும் ஐபிஇஇ பவுண்டேஷன் என்ற பெயர்களில் அறக்கட்டளைகள் செயல்பட்டு வந்துள்ளன.

இவற்றின் தலைவரான ஐ.பி.யேசுதாஸ், அதன் செயலாளரான எண்ணூரைச் சேர்ந்த எஸ்.தேவி மற்றும்ஏஜெண்டான செயல்பட்ட குறிஞ்சிப்பாடி எஸ்.கிரிஜா ஆகியோர் கூட்டு சேர்ந்து கடந்த 2011 முதல் 2014 வரையிலான காலகட்டத்தில் படிப்பறிவு இல்லாத ஏழ்மை நிலையில் உள்ள மகளிர் சுய உதவிக்குழு பெண்களிடம் 37.34 லட்சம் ஏமாற்றியதாக கூறப்படுகிறது.

இதனைதொடர்ந்து ரமா என்பவர் அளித்த புகாரின்படி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம். 3 பேருக்கும் 7 ஆண்டு சிறை, 46 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *