
கத்தாரில் நடந்த 20 ஆவது உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி போட்டியில் போர்ச்சுகல் அணி வெற்றிப் பெற்று உலகக் கோப்பையை வென்றுள்ளது.
கத்தார் தலைநகர் தோகாவில் 17 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான 20 ஆவது உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடந்தது. இதில், 48 அணிகள் பங்கேற்றனர். இந்நிலையில், இந்த போட்டியின் இறுதி ஆட்டத்தில் போர்ச்சுகல், ஆஸ்திரியா அணிகள் மோதின. இந்த, விறுவிறுப்பான ஆட்டத்தில் போர்ச்சுகல் அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரியாவை வீழ்த்தி முதல்முறையாக உலகக் கோப்பையை வென்றது.

