தூய்மைப் பணியாளரே டாக்டர்..!

 திருப்புவனம் அரசு மருத்துவமனையில் மருத்துவர் இல்லாததால் நோயாளிக்குத் தூய்மை பணியாளர் சிகிச்சை அளித்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சிவகங்கை மாவட்டம் பெத்தானந்தல் கிராமத்தைச் சேர்ந்த வரதராஜன்  தலையில் காயம் ஏற்பட்ட நிலையில், சிகிச்சைக்காக திருப்புவனம் அரசு மருத்துவமனைக்குச் சென்றார். அப்போது, மருத்துவமனையில் மருத்துவரும் செவிலியரும் பணியில் இல்லாததால், ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் தூய்மை பணியாளர் ஒருவர் காயத்திற்கு முதலுதவி சிகிச்சை அளித்தார்.
இதன், வீடியோ காட்சிகளை அங்கு சிகிச்சைக்காக வந்திருந்த மற்றொரு நோயாளி கைப்பேசியில் பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டுள்ளார். இந்த காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி  பொதுமக்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *