Advertisements

சென்னை பெருநகர காவல் ஆணையர் தலைமையில் நடைபெற்ற காவலர் குறைதீர் சிறப்பு முகாமில், காவலர்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று அவற்றின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், காவலர்களின் பணிச் சூழலை மேம்படுத்தவும் அவர்களின் குடும்ப நலனைக் கருத்தில் கொண்டும், சென்னை பெருநகர காவல் ஆணையர் அருண் உத்தரவின்படி ‘காவலர் குறைதீர் சிறப்பு முகாம்’ நடைபெற்றது. இந்த முகாமில் சுமார் 250 காவலர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர். குறிப்பாகப் பணிமாறுதல், காவலர் குடியிருப்பு வசதிகள் மற்றும் ஊதியக் குறைபாடுகள் உள்ளிட்ட மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குக் காவல் ஆணையர் உத்தரவிட்டார். இந்நிகழ்வில் இணை ஆணையர் மகேஸ்வரன் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
Advertisements





