.பாதுகாப்பு குற்றவாளிகளை பாதுகாப்பவர் கல்வித்துறை அமைச்சரா .? – ராகுல் கேள்வி

பிரலாத் ஜோஷி நமது கல்வி முறைக்கும், அதில் பயிலும் ஒவ்வொரு மாணவருக்கும் இழைக்கப்பட்ட அவமானம் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

தில்லியில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி செய்தியாளர்களிடம்  பேசினார். அப்போது, மத்திய அமைச்சரவையில் கல்வி அமைச்சராக நியமிக்க பலர் இருந்தும், பாலியல் குற்றவாளிகளை ஆதரிப்பவர் எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ள ஒருவரை பிரதமர் மோடி தேர்வு செய்திருப்பது ஆச்சரியமாக உள்ளதாகத் தெரிவித்தார்.

இது கல்வித்துறைக்கும், மாணவர்களுக்கும் அவமானம் என்று கூறினார். இதுதொடர்பாக, அவர் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், பாலியல் வன்கொடுமையாளர்களை ஆதரித்து பேசுபவனை விட அருவருப்பான மனிதன் வேறு எவனும் இருக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.

பிரலாத் ஜோஷி நமது கல்வி முறைக்கும், அதில் பயிலும் ஒவ்வொரு மாணவருக்கும் இழைக்கப்பட்ட அவமானம் என்று கூறியுள்ளார். அவர் இப்போது மேற்பார்வையிடும் நிறுவனங்களில் கோடிக்கணக்கான இளம் பெண்கள் படிக்கிறார்கள் என்றும், அவர்கள் பிரதமர் மோடியின் புதிய மத்திய கல்வி அமைச்சரை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *