மேகதாது விவகாரத்தில் மத்திய அரசை தவறாக சித்தரிக்காதீர்கள் : கொதித்தெழுந்த தமிழிசை.!

Advertisements

மேகதாது விவகாரத்தில் மத்திய அரசை தவறாக சித்தரிக்க வேண்டாம் என பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக  தமிழிசை சௌந்திரராஜன் சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில், மத்திய அமைச்சர் ராஜ்பூஷன்-சௌத்ரி, உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் சாராம்சத்தைத்தான் தெளிவுபடுத்தினாரே தவிர, மேகதாது திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்றும்,

ஒரு சட்டரீதியான விளக்கத்தைத் தமிழ்நாட்டின் உரிமைகளை மறுப்பதாகத் திரித்துக் கூறக்கூடாது என்றும், எந்தவொரு திட்டமும் சட்டப்பூர்வமான ஆய்விற்கு உட்படுத்தப்பட வேண்டியது அவசியம்; என்றும்,

அத்திட்டம் குறித்துத் தங்கள் ஆட்சேபனைகளைத் தெரிவிக்கத் தமிழ்நாடு அரசிற்கு முழு உரிமை உள்ளது எனவும் தமிழிசைசௌந்திரராஜன் தெரிவித்துள்ளார். மேலும். இப்பிரச்சினையை அரசியல் ஆக்குவதற்குப் பதிலாக, தவெக அரசும், அதன் கூட்டணிக் கட்சியான தமிழ்நாடு காங்கிரஸ{ம், உண்மையான முக்கியத்துவம் வாய்ந்த விஷயத்திற்காக, அதாவது காவிரி நீரில் தமிழ்நாட்டிற்கான நியாயமான பங்கைப் பெறுவதற்காக போராட வேண்டும் என்றும்,

இதுவரை ஒதுக்கீடு செய்யப்பட்ட சுமார் 28 புள்ளி 337 டி.எம்.சி. நீரில், தமிழ்நாடு வெறும் 3-ஆயிரத்து 442 டி.எம்.சி. அளவிலான நீரை மட்டுமே பெற்றுள்ளது. எனவே, நமது விவசாயிகளைக் காக்க, தமிழ்நாட்டிற்கான உரிய நீர் பங்கை விடுவிக்கக் கோருவதே, உடனடித் தேவையாக இருக்க வேண்டும் எனவும், தமிழ்நாட்டின் உரிமைகளுக்காகவும், விவசாயிகளின் நலனுக்காகவும் தமிழ்நாடு பாஜக எப்போதும் உறுதியாக நின்றது எனவும், இனியும் தொடர்ந்து உறுதியாக நிற்கும் எனவும் தமிழிசை சௌந்திரராஜன் குறிப்பிட்டுள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *