ஜனநாயகன் படத்தில் நீக்கப்பட்ட காட்சிகள் விரைவில் வெளியீடப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் முதலமைச்சர் விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படம் கடந்த 23ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. இந்தத் திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த 6 காட்சிகள் இறுதிக்கட்ட எடிட்டிங்கில் நீக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அவை விரைவில் வெளியிடப்படும் என்றும் கூறப்படுகிறது.
இதுகுறித்து, செய்தியாளர்களிடம் பேசிய இயக்குநர் எச். வினோத், விஜய் இடம்பெற்ற 2 ஜாலியான காட்சிகள், 2 ஆக்ஷன் காட்சிகள் மற்றும் 2 சென்டிமென்ட் காட்சிகள் இறுதிப் பதிப்பில் இடம்பெறவில்லை என்று தெரிவித்தார்.
அந்த காட்சிகளை விரைவில் ரசிகர்களுக்காக வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.


